ஆண்டிபட்டியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை: வட்டாட்சியருக்கு நெஞ்சு வலி

ஆண்டிபட்டியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை: வட்டாட்சியருக்கு நெஞ்சு வலி

மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் அதிகாரிகள்

ஆண்டிபட்டியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையின் போது வட்டாட்சியருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டி பகுதியில் புதிதாக துவங்கப்பட உள்ள பெட்ரோல் பங்கிற்கு தடையில்லா சான்று பெறுவதற்கு மதுரையை சேர்ந்த சுப்பிரமணி என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக சுப்பிரமணி தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சாருக்கு புகார் கொடுத்தார்.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை தேனி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் தலைமையிலான பத்து பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பணத்தை சுப்பிரமணியிடம் கொடுத்து ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த வட்டாட்சியர் காதர் செரீப்பிடம் கொடுக்க சொல்லி இருந்த நிலையில்,

அதைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியரை அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை அதனை தொடர்ந்து ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில்,

வட்டாட்சியர் காதர் செரிபிடம் தேனி லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் 2மணி நேரத்துக்கு மேலாக விசாரணையில் ஈடுபட்ட போது விசாரணையின் போது வட்டாட்சியருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால்,

அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story