கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை
கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர்.
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக உள்ள பைசூல் ராணி என்பவர் மீது தொடர் புகாரை அடுத்து நேற்று இரவு 7 மணி அளவில் தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால் சுதர் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இதில் முதல் கட்டமாக 1 லட்சத்து 59 ஆயிரம் பணம் கணக்கில் வராமல் பிடிபட்டது. இதுகுறித்து விசாரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story