லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ஆய்வு: அதிகாரிகள் அலறி அடித்து ஓட்டம்
ராமநாதபுரம் நகராட்சியில் தீபாவளி முன்னிட்டு பல லட்சங்கள் பண பரிமாற்றம் நடப்பதாக ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையின் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீரென இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் புகுந்தனர்
இதனால் நகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர் அலுவலகத்திற்கு உள்ளே சிக்கிய அலுவலக ஊழியர்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் அறையில் தடுத்து விசாரணை நடத்தினர் அப்போது அவர்களிடம் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது இதன் அடிப்படையில் முதல் கட்டமாக ரூபாய் 60,000 சிக்கி உள்ளது அதனை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு துறையினர் ஒவ்வொரு அறைகளாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை என்பது இரவு முழுவதும் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது தீபாவளி நேரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது நகராட்சி கதவுகள் முழுமையாக மூடப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது