லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் முரளி. இவர் கீழக்கரை நகராட்சியில் பதிவு பெற்ற ஒப்பந்ததாரர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கீழக்கரை நகராட்சியில் உள்ள மின் மோட்டார் பழுது சரி செய்தும், மின் பல்புகள் மற்றும் உபகரணங்கள் சப்ளை செய்த பணிகள் மேற்கொண்டிருந்தார். இது சம்பந்தமாக நகராட்சி ஆணையரை அணுகி தனக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை பற்றி கேட்டுள்ளார். இன்னிலையில் நகராட்சி ஆணையர் சம்பந்தப்பட்ட ஆலுவலர்களான உதயக்குமார், உதவி அலுவலர், மற்றும் சரவணன், கணக்கர் ஆகியோருக்கு காசோலை வழங்க அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி ஒப்பந்ததாரர் முரளி அலுவலர் உதயக்குமாரை பலமுறை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார். ஆனால் மேற்படி அலுவலர் தன்னையும் கணக்கர் சரவணனையும் கவனித்தால் மட்டுமே காசோலை தருவேன் என்று பிடிவாதமாக இருந்துள்ளார். மேலும் முரளி வேறு வழியில்லாமல் என்ன செய்யவேண்டும் என்று கேட்ட போது ரூ.2000/- லஞ்சம் கொட்டுத்து விட்டு காசோலையை வாங்கிக்கிட்டு போங்க என்று சொன்னதால் தான் பார்த்த வேலைக்கு பணம் தராமல் லஞ்சம் கேட்ட நபரை பற்றி இராமநாதபுரம் ஊழல் தடுப்புத்துறையினருக்கு புகார் தெரிவித்தார். அதன் படி ஊழல் தடுப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு லஞ்சம் கேட்டதை உறுதி செய்த பின்னர் மேற்படி முரளியிடம் இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அங்காங்கே மறைந்து இருந்து அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

அப்போது உதயக்குமாரின் அறிவுறுத்தலின்படி அலுவலர் சரவணன் லஞ்சப்பணத்தை கேட்டு பொற்ற போது அவரை கையும் களவுமாக ஊழல் தடுப்பு அதிகாரிகள் பிடித்தனர். அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மற்றொரு அலுவலரான உதயக்குமாரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story