லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ரெய்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ரெய்டு நடத்தினர்.
விருதுநகர் மாவட்பம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிங்கம்மாள் தெருவை சேர்ந்த வாசுதேவன் என்பவர் வீடு கட்டுவதற்காக நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர அமைப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது கட்டிட அமைப்பு வரைவு ஆய்வாளர் ஜோதிமணி வாசுதேவனிடம் ரூபாய் பத்தாயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் வாசுதேவன் புகார் அளித்து அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பத்தாயிரம் ரூபாயை கொடுத்துள்ளனர். இன்று காலை ரூபாய் 10 ஆயிரத்தை நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள நகரம் அமைப்பு அலுவலகத்தில் ஜோதி மணி இடம் கொடுக்கும் போது ஏடிஎஸ்பி ராமச்சந்திரன் மற்றும் ஆய்வாளர்கள் பூமிநாதன், சால்வன்துரை தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக ஜோதி மணியை பிடித்து அவரிடம் இருந்து லஞ்சப் பணத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். விடியா ஆட்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் அதிகாரிகள் தொடர்ந்து லஞ்ச பணம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்பொழுது கையும் களவுமாக அரசு அதிகாரியை லட்ச ஒழிப்பு துறையினர் பிடித்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story