ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் அதிரடி சோதனை - பணம் பறிமுதல்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தணிக்கைப் பிரிவு உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ளாட்சி, நிதி தணிக்கைத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில், முறைகேடான வழிகளில் பணப் புழக்கம் இருப்பதாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன் தலைமையிலான போலீஸாா், திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு தணிக்கைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு சோதனையிட வந்தனா். இரவு 11 மணி வரை நடைபெற்ற இந்தச் சோதனையின் போது, அந்த அலுவலகத்திலிருந்த உதவி இயக்குநா், அலுவலா்கள், ஊழியா்கள் என யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்தச் சோதனையின் போது, கணக்கில் வராத ரூ. 1.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக ஊழல் தடுப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.
Next Story