இலுப்பூரில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!

இலுப்பூரில் கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
இலுப்பூரில் கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இலுப்பூர் பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியே வலம் வந்தது. இதில் மாவட்டக் கோட்ட கலால் அலுவலர் ரங்கராஜன், இலுப்பூர் வட்டாட்சியர் சூரியபிரபு, மேலாளர் கலைமணி (கலால்), வருவாய் ஆய்வாளர் ராஜா (கலால்) உள்ளிட்ட வருவாய்த் துறையினர் பலர் பங்கேற்றனர். கள்ளச்சாராயம் ஒழிப்பு மற்றும் போதைப் பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு இலுப்பூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. தொடர்ந்து விழிப்புணர்வுப் இலுப்பூர் பேரணியை கோட்டாட்சியர் தெய்வநாயகி கொடியசைத்துத் தொடங்கிவைத்து விழிப்புணர்வு வாசகம் எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களை . மக்களிடம் வழங்கினார்.

Tags

Next Story