காரைக்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

காரைக்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

விழிப்புணர்வு 

காரைக்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் 65 ஆம் ஆண்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் அமைப்பு தினத்தை முன்னிட்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிர்வாகிகள் பொதுமக்களின் காலில் விழுந்து மதுபானத்தையும் போதைப் பொருளையும் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

போதைப்பொருளால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறி கோஷமிட்டவர்கள், போதைப் பொருளை தடுக்க தவறிய மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

இதில் நகர செயலாளர் சிவாஜி காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகி ராமச்சந்திரன் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற பெண் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

Tags

Next Story