போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டி
விழிப்புணர்வு
பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு (பொறுப்பு) பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்னா நாயர் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் நாகப்பன் வரவேற்று பேசினார். பேச்சிப்பாறை போலீஸ் நிலைய சிறப்பு உதவி இன்ஸ்பெக்டர் வில்சன், உதவி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நவீன், பிரபின் ஆகியோர் போதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து பேசினர்.
.போதை விழிப்புணர்வு பற்றி பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் சரவணபெருமாள் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சஜிதா செய்து இருந்தார்.
Next Story