நாமக்கல்லில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

இருநூறுக்கும் மேற்பட்டோர் மனித சங்கிலியில் கலந்து கொண்டு போதைக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்தனர்.

சர்வதேச போதைப் பொருள் மற்றும் சட்ட விரோதமான கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா அறிவுறுத்தலின்படி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பது மற்றும் போதைபொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது என்ற நோக்கத்துடன் ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி சர்வதேச போதைப் பொருள் மற்றும் சட்ட விரோதமான கடத்தலுக்கு எதிரான தினம் கடைபிடிக்கப்படுகிறது.

போதைப்பொருட்களை பயன்படுத்துதல், போதைப்பொருட்களை கடத்துதல், போதை பொருள் விற்பனை ஆகியவற்றை ஒழிக்க கடுமையான பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகின்றன.நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, சர்வதேச போதைப் பொருள் மற்றும் சட்ட விரோதமான கடத்தலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளும், விழிப்புணர்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனை தொடர்ந்து நேற்று நாமக்கல் பஸ்நிலையம் அருகிலுள்ள பூங்கா சாலையில் சர்வதேச போதைப் பொருள் மற்றும் சட்ட விரோதமான கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்எஸ்.ராஜேஸ் கண்ணன் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன் அவர்கள் முன்னிலையில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள்/ அலுவலர்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள், வணிகர் சங்கங்கள், அரிமா சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் மனித சங்கிலியில் கலந்து கொண்டு போதைக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்தனர்.

Tags

Next Story