குழந்தைகளுக்கான போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சியில் குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருச்சி மாநகரம் பீமா நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியை மேரிதன செல்வி தலைமையில் 24.06-24 நடைபெற்றது சிறப்பு விருந்தினராக மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தைகளின் நான்கு வகையான உரிமைகள் குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006 பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும்சட்டம் (போக்சோ) 2012 குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் 1986 மற்றும் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் சமுதாய அளவிலான பிரச்சனைகள் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 10 9 8 மற்றும் போதைப்பொருள் சம்பந்தமாக தகவல் தெரிவிப்பதற்கான தொலைபேசி எண் 10581 குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்
Next Story