காரைக்குடியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

காரைக்குடியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

போதை தடுப்பு பேரணி

காரைக்குடியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
காரைக்குடியில் சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு காவல்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் போதை பொருள் எதிர்ப்பு மற்றும் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் காரைக்குடி டி.எஸ்.பி பிரகாஷ் தலைமையில் காவல்துறையினரும், தேவகோட்டை கோட்டாட்சியர் உதவி ஆணையர் தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளும் என 200க்கும் மேற்பட்டோர் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். கண்ணதாசன் மணி மண்டபத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணி 100 அடி சாலை, பெரியார் சிலை வழியாக கம்பன் மணிமண்டபம் சாலையில் நிறைவடைந்தது. கல்லூரி மாணவர்கள் போதை பொருளினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கோசங்கள் எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சாலையில் சென்ற அரசு பேருந்தில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்கள் வழங்கினர். தொடர்ந்துதடை செய்யப்பட்ட போதை பொருள் தடுப்பது குறித்த புகார் அளிப்பது தொடர்பான எண் 10581 அறிவிப்பை பயணிகள் கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டி காவல் துறை டிஎஸ்பி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story