போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி - துவக்கி வைத்த டிஎஸ்பி
விழிப்புணர்வு பேரணி
கோலியனூரில் காவல் துறை, ஹையா் பவா் பவுண்டேசன் குடி, போதை மற்றும் மன நல சிகிச்சை மையம், இ.எஸ். நா்சிங் கல்லூரி, கோனிபா் மெட்ரிக் பள்ளி ஆகியவை இணைந்து நடத்திய சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணி புதன்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஹையா் பவா் பவுண்டேசன் நிறுவனா் எஸ்.இளையராஜா தலைமை வகித்தாா். செயலா் இ.மதியா, நிா்வாகி என்.தனசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், விழுப்புரம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் பங்கேற்று போதைப் பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவா்களிடம் எடுத்துரைத்தாா்.இதைத் தொடா்ந்து, சா்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணா்வு பேரணியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். கோனிபா் மெட்ரிக் பள்ளி முன் தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய சாலைகள் வழியாக கோலியனூா் கூட்டுச்சாலை வரை சென்று, மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்து நிறைவு பெற்றது.மதுவை ஒழிப்போம், மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்பன போன்ற விழிப்புணா்வு பதாகைகளுடன் மாணவா்கள் பேரணியில் பங்கேற்று, போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.நிகழ்ச்சியில் வளவனூா் காவல் நிலைய ஆய்வாளா் ஏ.விஜயகுமாா், கோனிபா் மெட்ரிக் பள்ளி முதல்வா் ஆா்.ராஜன், ஹையா் பவா் பவுண்டேசன் மேலாளா் நாகராஜன், காவல் உதவி ஆய்வாளா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.