போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி!

சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் நடந்த போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கோவை:போதைப் பொருள் எதிர்ப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு சார்பிலும் தனியார் பள்ளி கல்லூரிகள் சார்பிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு பேரணிகள் விழிப்புணர்வு நாடகங்கள் ஆகியவை நடத்தப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் பல்வேறு தனியார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்தப் பேரணியில் போதைப் பொருள் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போதைப் பொருள் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் வகையிலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பேரணி மேற்கொண்டனர்.

இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி ரேஸ்கோர்ஸ் முழுவதும் சுற்றி வந்து முடிவடைகிறது.பேரணியை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.முன்னதாக போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

Tags

Next Story