அதியமான் அரசுப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணி
சர்வதேச போதைப் பொரும் ஒழிப்பு தினம் சொசைட்டி அப்லிப்ட் நெட்வொர்க் தொண்டு நிறுவணம் மற்றும் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்தும் போதைப்பொருளுக்கான பயன்பாடு மற்றும் கடத்தல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மாணவர்கள், ஆசிரியர்கள், சமுக நல அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர். அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி தொடங்கப்பட்டு குமாரசாமிபேட்டை, பென்னாகரம் மெயின் ரோடு, நான்கு ரோடு சாலை வழியாக சென்று மீண்டும் அதிகமான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முடிவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல், சொசைட்டி அப்லிப்ட் நெட்வொர்க் தொண்டு நிறுவனம் - மது போதை மீட்பு மறுவாழ்வு மையம் திட்ட ஒருங்கிணைப்பாளர். மு.ஆறுமுகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன்,மாவட்ட மனநலதிட்டம் பென்னாகரம், தருமபுரி மாவட்ட அரசு தலைமை மருந்துவமனையில் மனநல உளவியலாளராக பணியாற்றும். க.லோகமணி, மதுவிலக்கு மற்றும் போதை தடுப்பு பிரிவு காவல் துறை எஸ். ஜெய்யப்பன் கலால் துறை மாது ராஜன், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.