பரமத்தி வேலூரில் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி

பரமத்தி வேலூரில் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி

பரமத்தி வேலூரில் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியை வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.


பரமத்தி வேலூரில் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியை வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

பரமத்தி வேலூரில் வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையில் வேலூர் பஸ் நிலையம் மற்றும் மோகனூர் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் போதை ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.‌ நிகழ்ச்சியில் வேலூர் தனியார் கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்கள், பிரம்மகுமாரிகள் இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உட்பட 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போதை ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேச்சு போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இன்ஸ்பெக்டர் ரங்கசாமி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சாந்தி மற்றும் 500- க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story