நாட்றம்பள்ளியில் போதை தடுப்பு ஊர்வலம்-ஏஎஸ்பி பங்கேற்பு

நாட்றம்பள்ளியில் போதை தடுப்பு ஊர்வலம்-ஏஎஸ்பி பங்கேற்பு

விழிப்புணர்வு பேரணி 

நாட்டரம்பள்ளி கல்லூரி மாணவிகள் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருப்பத்தூர் அடுத்த நாட்றம்பள்ளியில் வாணியம்பாடி தனியார் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற போதை தடுப்பு ஊர்வலம்-ஏஎஸ்பி பங்கேற்பு தமிழக அரசு போதைபொருட்களை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்க எடுத்து வருகிறது.

அந்த வகையில் திருப்பத்தூர் அடுத்த வாணியம்பாடி தனியார் கல்லூரி மாணவிகள் நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மேல்நிலைப்பள்ளி வரை போதை விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்த‌பேரணியில் ஏஎஸ்பி அசுமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் விஜயகுமார்,

ஆய்வாளர் பழனி, பேரூராட்சி 14-வது வார்டு உறுப்பினர் குருசேவ் கலந்துக்கொண்டனர். இந்த பேரணியில் வாணியம்பாடி தனியார் கல்லூரி மாணவிகள், தேசிய மாணவர் படையை சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டார். கல்லூரி மாணவிகள் ஊர்வலமாக சென்று போதைபொருளை தடுக்க வேண்டும். போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என கோசம் எழுப்பினர்.

தடுப்போம் தடுப்போம் போதை பொருட்களை தடுப்போம். காப்போம் காப்போம் மனித உயிர்களை காப்போம் என்றும், போதை பொருட்களால் பல்வேறு தீங்கு நடைபெறுவதாக கோரியும், முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story