திருவேங்கடத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருவேங்கடத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருவேங்கடத்தில் நடந்த போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் சரக போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாடசாமி மற்றும் சங்கரன்கோவில் சரக காவல் துணை கண்காணிப்பாளர் சுதீர். திருவேங்கடம் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் உதவி ஆய்வாளர் முத்துக்குமரன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த பேரணி திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். மேலும் போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story