கால்வாயில் தலகாணி கற்களை அடைத்து வைக்கும் சமூக விரோதிகள் !

கால்வாயில் தலகாணி கற்களை அடைத்து வைக்கும் சமூக விரோதிகள் !

கால்வாய்

சாக்கடை கால்வாயில் கற்களை போடும் நபர்கள் யாரென்று சிசிடிவி பதிவுகளை கொண்டு ஆராயவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு சுமார் 15க்கும்‌ மேற்பட்ட தெருக்களை உள்ளடக்கியது. திருப்பூர் சாலையில் தொடங்கி கோவை சாலை, மெயின் ரோடு, வசந்தம் நகர், லட்சுமி நகர், லட்சுமி நகர் 2வது வீதி, காந்தி வீதி, சித்தி விநாயகர் கோயில் வீதி, தேவாங்கபுரம் கிழக்கு, காமராஜ் வீதி, எல்.ஜி.ஜி.எஸ். காலணி, மா.போ.சி வீதி, மாரியம்மன் கோயில் வீதி, புது விநாயகர் கோயில் வீதி, சரோஜினி நாயுடு வீதி, தட்டான் தோட்டம், பஜனை மட‌ வீதி வரை பரப்பளவை உள்ளடக்கியது. இந்த நிலையில் காங்கேயம் பகுதிக்குட்பட்ட 10வது வார்டில் கழிவுநீர் செல்லக்கூடிய கால்வாயில் அடிக்கடி அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் துர்நாற்றமும், கொசு தொல்லைகளும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில் உடனடியாக காங்கேயம் நகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு சரி செய்யும் பணிகள் நடைபெற்றது, அப்போது கால்வாய் முழுவதும் தலைகாணி, 40க்கும் மேற்கொண்ட கற்களை கொண்டு சாக்கடை கால்வாயை சமூக விரோதிகள் வேண்டும் என்றே அடைத்துவைத்தது தெரிய வந்தது. மேலும் அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக இவ்வாறு நடைபெற்றதா வேறு ஏதோனும் காரணமா என விசாரித்து வருகின்றனர். மேலும் சாக்கடை கால்வாயில் கற்களை போடும் நபர்கள் யாரென்று சிசிடிவி பதிவுகளை கொண்டு ஆராயவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story