புகையிலை எதிர்ப்பு தினம் காஞ்சியில் விழிப்புணர்வு

புகையிலை எதிர்ப்பு தினம் காஞ்சியில் விழிப்புணர்வு

விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி காஞ்சியோஉரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடந்தது

காஞ்சிபுரம்,மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில் அறிவுரைப்படி, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில், உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடந்தது. காஞ்சிபுரம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் கரோலின் தலைமை வகித்தார். 'புகையிலை தொழில் குறுக்கீட்டில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல்' என்ற தலைப்பில் ஓவியம், கட்டுரை, கவிதை போட்டி நடத்தப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவியருக்கு காஞ்சிபுரம் இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில், டாக்டர் ஜெயந்த பத்மநாபன், டாக்டர் ஜெயகரன் ஆகியோர் பரிசு வழங்கினர். மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோபிநாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்றறார். இதில், மாணவியர் உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்றனர். 'புகையிலை தொழில் குறுக்கீட்டில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல்' என்ற தலைப்பில், மவுனமொழி நாடகம் நடத்தப்பட்டது.

Tags

Next Story