கோவில்பட்டியில் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு: மினி மாரத்தான் போட்டி

கோவில்பட்டியில் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு: மினி மாரத்தான் போட்டி

மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த அதிகாரிகள்

கோவில்பட்டியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான்  போட்டி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இராமசுவாமிதாஸ் பூங்கா அருகில் இன்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அறிவுறுத்துதலின் படி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியினை கோவில்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ், கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினர் கா.கருணாநிதி மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

இவ்விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியில் கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கோ.வெங்கடசாமிநாயுடு கல்லூரி மாணவியர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மேலும், இந்த மினி மாரத்தான் போட்டி இராமசுவாமிதாஸ் பூங்காவில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று சத்யபாமா திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.

இந்நிகழ்வின்போது, மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story