திருப்பூரில் வன்முறை எதிர்ப்பு தின கருத்தரங்கம்
கருத்தரங்கம்
திருப்பூரில் வன்முறை எதிர்ப்பு தின கருத்தரங்கம் தியாகி பழனிசாமி நிலையத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்றது. வன்முறை எதிர்ப்பு தின கருத்தரங்கத்திற்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பவித்திர தேவி தலைமை வகித்தார். சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட இணை அமைப்பாளர் கே.எல்லம்மாள் வரவேற்றார். மாதர் சங்க மாநில செயலாளர் ஜி.ராணி, சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாநில இனை அமைப்பாளர் ஆர்.மாலதி ஆகியோர் சிறப்புரையாற்றினர், இதில், சிஐடியு அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.சித்திரா, மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.மாலதி உட்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ஆர்.கவிதா நன்றி கூறினார்.
Next Story