அந்தோணியார் பொங்கல்- கிறிஸ்துவ மக்கள் பங்கேற்பு
மாடுகள் அவிழ்த்தல்
அரியலூர் சுற்றுவட்டார கிராமங்களில் நடந்த பொங்கல் விழாவில் அந்தோணியாருக்கு கிறிஸ்துவ மக்கள் படையலிட்டு வழிபாடு செய்தனர்.
அரியலூர் மாவட்டம் கீழமைக்கேல்பட்டி, மேலமைக்கேல்பட்டி, மூர்த்தியான் மற்றும் குறிச்சி ஆகிய கிராமங்களில் அந்தோணியார் பொங்கல் விழாவையொட்டி மாடுகள் அவிழ்க்கும் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. இதில் அந்தந்த கிராம கிறிஸ்துவ தேவாலயங்களில் பொங்கல் வைத்து அந்தோணியாருக்கு படையல் இடபட்டது. இதனையடுத்து பங்குதந்தைகள் மாடுகளை மந்திரித்து அவிழ்த்து விட்டனர். இதனால் மாடுகளுக்கு எந்த நோய் தொற்றும் ஏற்படாது என கிறிஸ்துவ மக்களால் நம்பபடுவது குறிப்பிடதக்கது.
Next Story