அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாள்: இளைஞரணி சார்பில் அன்னதானம்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு மலைக்கோட்டை பகுதி திமுக இளைஞரணி சார்பில் அன்னதானம்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக மலைக்கோட்டை பகுதி இளைஞரணி சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள விடிவெள்ளி மன வளர்ச்சி குன்றிய காப்பக குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி, திமுக கிழக்கு நகர செயலாளர் மதிவாண தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் மருந்து கடை மோகன், நகர துணை அமைப்பாளர் தீபக் . வட்டச் செயலாளர்கள் ராஜசிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story