ராசிபுரத்தில் அடுக்குமாடி வணிக வளாகம்:- நகர்மன்ற கூட்டத்தில் ஒப்புதல்

ராசிபுரத்தில் அடுக்குமாடி வணிக வளாகம்:- நகர்மன்ற கூட்டத்தில் ஒப்புதல்

ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் அடுக்குமாடி வணிக வளாகம்:- நகர்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல்

ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் அடுக்குமாடி வணிக வளாகம்:- நகர்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ரூ.5.86 கோடி மதிப்பில் அடுக்குமாடி வணிக வளாகம் மற்றும் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் ரூ.5.86 கோடி மதிப்பில் அமைக்க அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது குறித்து நகர்மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.ராசிபுரம் நகர்மன்றத்தின் கூட்டம் நகர்மன்றத் தலைவர் முனைவர் கவிதா சங்கர் தலைமையில் நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சியில் 1960 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த தினசரி மார்க்கெட் கடைகள் மிகவும் பழுதான நிலையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2021-22 ன் கீழ் ரூ.2.43 கோடி மதிப்பில் புதியதாக கட்டும் பணி நகராட்சி நிர்வாக துறையில் அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. இப்பணிகள் தற்போது பணிகள் நிறைவு பெற்றது

மேற்கண்ட தினசரி மார்க்கெட்டில் 58 நிரந்தர கடைகள் ஒன்பது ஆண்டு குத்தகைக்கும், 42 நடைபாதை கடைகள் ஓராண்டு குத்தகைக்கும் பொது ஏலம் விட ராசிபுரம் நகராட்சி நகர மன்றம் அனுமதி வழங்குவது குறித்தும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2023-24 இன் கீழ் ரூ.586.00 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சிக்கு சொந்தமான பழைய பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் மற்றும் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கவும் அரசு நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் மக்களின் அன்றாட தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை அமைத்தல் போன்ற பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராசிபுரம் நகர்மன்ற துணைத் தலைவர் கோமதி ஆனந்தன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கி.சேகர், நகராட்சி பொறியாளர் சாந்தி வடிவேல், பொதுப்பணி மேற்பார்வையாளர் தேவி, துப்புரவு அலுவலர் செல்வராஜ், நகரமைப்பு அலுவலர் ராஜேந்திரன், நகராட்சி மேலாளர் ராமச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் மாணிக்கம், உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story