அபேக்ஸ் சங்க தேசிய மாநாடு - 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

அபேக்ஸ் சங்க தேசிய மாநாடு - 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

குமாரபாளையத்தில் அபேக்ஸ் சங்க தேசிய மாநாடு - 400 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

குமாரபாளையத்தில் அபேக்ஸ் சங்க தேசிய மாநாடு - 400 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அபெக்ஸ் சேவா சங்க தேசிய மாநாடுநடந்தது.குமாரபாளையத்தில் அபெக்ஸ் சேவா சங்க 2 நாள் தேசிய மாநாடு முன்னாள் தேசிய தலைவர் மதிவாணன் தலைமையில் நேற்று துவங்கியது. இது குறித்து மதிவாணன் கூறியதாவது: அபெக்ஸ் சங்கம் சார்பில் எண்ணற்ற சேவைகள் செய்துள்ளோம். இதன் 39வது தேசிய மாநாடு குமாரபாளையத்தில் நடந்தது. ஆஸ்திரேலியாவில் துவங்கப்பட்ட இந்த சங்கம் சார்பில், குழந்தை தொழிலாளர் தடை சட்டம் கொண்டு வர காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம்கள், ரத்தவகை கண்டறிதல் முகாம்கள், கல்வி உதவி தொகை வழங்கல், மருத்துவ உதவிக்கு உதவி செய்தல் என்பது உள்ளிட்ட பல சேவைகள் செய்துள்ளோம். தற்போது நடந்து வரும் மாநாட்டில் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து 400க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பங்கேற்றுள்ளனர். இவர்கள் குமாரபாளையம் அருகே உள்ள பவானி சங்கமேஸ்வரன் கோவிலுக்கு அழைத்து சென்று, சுவாமி தரிசனம் செய்ய வைத்தோம். மூன்று ஆறுகள் சங்கமிக்கும் காவிரி ஆறு, பவானி ஆறு, கூடுதுறை பகுதியை கண்டு அனைவரும் மகிழ்ந்தனர். ஊராட்சி கோட்டை பகுதியில் உலா சத்தியத்தின் சக்தி நிலை சங்கம் தியான மண்டபத்திற்கு அழைத்து சென்றதும், அனைவரும் தியானம் செய்தனர். தேசிய அளவிலான நிர்வாகிகள் தேர்வு நடக்கவுள்ளது. இந்த நிர்வாகத்தின் கீழ் எங்கள் சேவைப்பணி மேலும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார். இதில் பங்கேற்ற பல மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் அந்தந்த மாநில மொழி பாடல்களை இசையுடன் பாடி மகிழ்ந்தனர். பங்கேற்ற அனைவரும் ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

Tags

Next Story