அரசு மருத்துவமனையில் பல வருடங்களுக்கு பின் குடல் வால் அறுவை சிகிச்சை

அரசு மருத்துவமனையில் பல வருடங்களுக்கு பின் குடல் வால் அறுவை சிகிச்சை
வால்பாறையில் உள்ள மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனை நூறாண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிகிச்சைக்காக மக்களும் வந்து செல்கின்றனர்.சில வருடங்களாக மருத்துவமனையில் மருத்துவர்கள்,ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் மருத்துவமனைக்கு வயிற்று வலிக்கு சிகிச்சை பெற இரண்டு பெண்கள் அனுமதிக்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இரண்டு பெண்களுக்கும் குடல் வால் (குடல் வளரி )நோய் ஏற்பட்டு உள்ளது தெரியவந்தது.அறுவை சிகிச்சைக்கு பொள்ளாச்சி,கோவை அனுப்பாமல் வால்பாறை மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுக்கப்படு இரண்டு பெண்களுக்கும் மருத்துவர் யுவபிரியா,சுரேஷ் தலைமையில் செவிலியர்கள் பத்மா, ராமாதேவி,மலர் ஆகியோருடன் இணைந்த்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அறுவை சிகிச்சை பின் இரண்டு இரண்டு பெண் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.வால்பாறை மருத்துவமனையை தரம் உயர்த்தி நோயாளிகளை சிகிச்சைக்காக பொள்ளாச்சி மற்றும் கோவை அனுப்பாமல் அனைத்து சிகிச்சைக்கும் மக்களுக்கு கிடைக்க பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story