வரத்து அதிகரிப்பால் ஆப்பிள் விலை சரிவு
ஆப்பிள் விலை சரிவு
மனித உடலுக்கு தேவையான சத்துக்கள் காய்கறி மற்றும் பழங்களில் அதிகம் உள்ளதால் மருத்துவர்கள் காய்கறி பழங்களை அதிகமாக உண்ண வேண்டும் என நமக்கு அறிவுறுத்தி வரும் நிலையில் பழம் சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலே பலரின் நினைவுக்கு உடனே ஞாபகம் வருவது ஆப்பிள் தான்.
வடமாநிலங்களில் இருந்தும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்தும் தர்மபுரி மாவட்டத்திற்கு ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, சாத்துக்குடி, தர்ப்பூசணி உள்ளிட்ட பழங்கள் விற்பனைக்கு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் ஆப்பிள், பெங்களூரு மார்க்கெட் மூலமாக தர்மபுரிக்கு விற்பனைக்கு வருகிறது.
கடந்த சில மாதங்களாக அரூர் சுற்றுவட்டார பகு திகளில் ஆப்பிள் கிலோ 180 ரூபாய் முதல் 200 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், அரூர் பகுதிக்கு சிம்லா ஆப்பிள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆப்பிள் விலை குறையத் துவங்கி உள்ளது.
பழக்கடைகள், வாரச் சந்தைகள் மற்றும் தள்ளு வண்டி கடைகளில் வைத்து சில்லரை விலையில் ஒரு கிலோ ஆப்பிள் 120க்கு விற்பனை செய்யப்படுகிறது. சீசன் துவங்கி சிம்லா ஆப்பிள் வரத்துவங்கி விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஆப்பிளை வாங்கிச் சென்றனர்.