வெளிநாடுகளில் உயர்கல்வி பயில பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

வெளிநாடுகளில் உயர்கல்வி பயில பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் மாணாக்கர்கள் இணையவழியில் விண்ணப்பிக்குமாறு ஒன்றிய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் நலம் கல்வி உதவித்தொகை ஒன்றிய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் 2024-25ம் ஆண்டிற்கான முதுநிலை, பிஎச்டி மற்றும் முனைவர் ஆராய்ச்சிப்படிப்பு மற்றும் உயர் படிப்பை (National Overseas Scholarship Scheme (NOS) வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் மாணாக்கர்கள் கீழ்காணும் இணையவழியில் விண்ணப்பிக்குமாறு ஒன்றிய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆர்வமுள்ள பழங்குடியினர் மாணாக்கர்கள் https://overseas.tribal.gov.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி 31.05.2024க்குள் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story