தேனீ வளர்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு

தேனீ வளர்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
X

தேனீ வளர்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு

டிசம்பர் 26க்கு முன்னதாக தேனி உழவர்சந்தை எதிரே உள்ள கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்
தேனியில் கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் டிச, 26 முதல் 2024 ஜன1 வரை தேனீ வளர்ப்பு, தேன் உற்பத்தி செய்வது பற்றிய பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. பயிற்சிக்கு 18 வயது நிரம்பிய கிராமப்புற ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி தேவையில்லை. பயிற்சி 9:30 முதல் 5:30 மணி வரை நடைபெறும், மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு தொழில் துவங்க கடன் வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும்.விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், ஆதார் நகல் ஆகியவற்றோடு டிச, 26க்கு முன்னதாக தேனி உழவர்சந்தை எதிரே உள்ள கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 95003 14193 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என நிலைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story