ஜவுளிப்பிரிவுகளில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்

ஜவுளிப்பிரிவுகளில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்

மாவட்ட ஆட்சியர் 

தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் மூலமாக ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் மூலமாக ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் இந்திய பொருளாதாரத்தில் ஜவுளித்தொழில் ஒரு உன்னதமான இடத்தினை பிடித்துள்ளது.

விவசாயத்திற்கு அடுத்த படியாக கிராமப்புற மக்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பினை வழங்குவதில் ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானதாகும்.

தமிழ்நாட்டின் ஜவுளித்துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசு துணிநூல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் (SITRA) மூலமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு (ஆண்/பெண்) ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேற்படி பயிற்சியினை பெற விரும்புபவர்கள் https://tntextiles.tn.gov.in/jobs/ என்ற இணையதள முகவரியில் தங்களது விபரங்களை பதிவு செய்து பயன்பெற வேண்டுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் துணிநூல் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள், உற்பத்தி கூட கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும். அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். எனவே, சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை விருதுநகர் மாவட்டத்தில் பயன்படுத்தி,

தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் அனைத்து தொழில்முனைவோரும் முன்வர வேண்டும்.

மேலும், இது குறித்த விபரங்களுக்கு, துணை இயக்குநர், மண்டல துணிநூல் துணை இயக்குநர் அலுவலகம், 39, விஸ்வநாதபுரம் மெயின் ரோடு, மதுரை- 625- 014, மின்னஞ்சல் முகவரி - ddtextilesmdu@gmail.com. தொலைபேசி எண். 0452-2530020, 96595 32005. என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story