சிறந்த தொழில் முனைவோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் -ஆட்சியர் கற்பகம்

சிறந்த தொழில் முனைவோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் -ஆட்சியர் கற்பகம்

ஆட்சியர் கற்பகம் 

பெரம்பலூர் மாவட்டத்தில் 2023-2024ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கப்படவுள்ளதால் விருப்பமுள்ள தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ள தகவலில், தமிழ்நாடு அரசு 2023-2024ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, சிறந்த தொழில் முனைவோர் உட்பட ஆறு பிரிவுகளில், தமிழக அரசு விருது வழங்க உள்ளது,

மாநில அளவிலான சிறந்த வேளாண் தொழில் முனைவோர் விருது, மாநில அளவில் சிறந்த மகளிர் தொழில் முனைவோர் விருது, சிறப்பாக செயல்படும் நலிந்த மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவை சார்ந்த தொழில் முனைவோர் விருது, மாநில அளவில் சிறந்த தரம் மற்றும் ஏற்றமதிக்கான விருது, மாநில அளவில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது, மாவட்ட அளவில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது என மொத்தம் ஆறு பிரிவுகளில் வழங்கப்படஉள்ளது.

விருது பெறும் விரும்பும் தொழில் நிறுவனங்கள் www.awards.fametn.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான இறுதி நாள் மே 20 ஆம் தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பெரம்பலூர் -621212 என்ற முகவயிலும் அல்லது, 89255 33976, என்ற செல்பேசி மூலமும் தொடர்பு கொள்ளலாம். என தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story