முன்னாள் படைவீரரைச் சார்ந்தோருக்கான இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கலாம் !

முன்னாள் படைவீரரைச் சார்ந்தோருக்கான இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கலாம் !

விண்ணப்பம் 

2024-25 –ஆம் கல்வி ஆண்டில் பல்வேறு கல்லூரிகளில் கலை, அறிவியல், தொழிற்பட்ட படிப்பு, பட்டயப் படிப்பு, பட்ட மேற்படிப்யில் முன்னாள் படைவீரரைச் சார்ந்தோருக்கான உள்ள இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்து பயனடைய சார்ந்தோர் சான்று பெற்றிட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது கீழ்க்காணும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து மின்னஞ்சல் வாயிலாகவோ கீழ்க்காணும் ஆவணங்கள் மற்றும் நிபந்தனைக்களுக்குட்பட்டு விண்ணப்பிக்கலாம்.

இணையதள முகவரி: https://exwel.tn.gov.in.

மின்னஞ்சல் முகவரி exwelnmk@tn.gov.in

விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள் (அசல் மற்றும் 1 பிரதி நகல்)

1. மாணவர்களின் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.

(பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுத்துறை மதிப்பெண் சான்று சமர்ப்பிக்க இயலாத

பட்சத்தில் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலை

கொண்டு வரவும்.)

2. பள்ளி மாற்று சான்றிதழ்.

3. கல்லூரி அனுமதிக்கான விண்ணப்ப படிவம் / இணையதள விண்ணப்பம்.

4. முன்னாள் படைவீரர் / விதவையர் அவர்களின் அடையாள அட்டை மற்றும்

படைவிலகல் சான்று அசல் (சரிபார்த்தலுக்காக).

5. சார்ந்தோரது பெயர் படைவிலகல் சான்றில் குறிப்பிடப்படாத பட்சத்தில்,

பகுதி – II -ஆணை நகல் (Part-II-Order) எடுத்து வரவும்.

ஒரு படிப்பிற்காக (Course) பெறப்படும் சார்ந்தோர் சான்று அந்த படிப்பிற்கு மட்டுமே பொருந்தும். எனவே ஒவ்வொரு படிப்பிற்கும் தனித்தனியாக சார்ந்தோர் சான்று பெற்று உரிய விண்ணப்பத்துடன் நகல் அனுப்ப வேண்டும், கலந்தாய்வின் போது அசல் சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட சார்ந்தோர் சான்று நடப்பு ஆண்டுக்கு உபயோகப்படுத்தக்கூடாது, அவ்வாறு பயன்படுத்தும் பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.

மருத்துவ / பல் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க Priority –I முதல் Priority -V வரை தகுதிபடைத்தவர்கள் என கருதும் முன்னாள் படைவீரர்கள்/ சார்ந்தோர்கள் அந்தந்த முன்னுரிமையை உறுதிபடுத்திட தேவையாக ஆவணங்களை தத்தம் ஆவணக் காப்பகத்திலிருந்து விண்ணப்பிக்கும் முன்பே பெற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன், நாமக்கல்

அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04286-233079 வாயிலாகவோ

தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமாதெரிவித்துள்ளார்.

Tags

Next Story