பெரம்பலூரில் இலவச அழகு கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூரில் இலவச அழகு கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

வங்கிக் கிளை

பெரம்பலூரில் இலவச அழகு கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்களுக்கு இலவச அழகு கலைப் பயிற்சி பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் அழகு கலை பயிற்சி இலவசமாக வரும் மே மாதம் 6-ம் தேதி முதல் அளிக்கப்பட உள்ளது.

மேலும் இப்பயிற்சியில் ஃபேசியல்,பிளீச், பெடிக்யூர், மெனிக்யூர், முடி திருத்தம், மணப்பெண் அலங்காரம், மெஹந்தி, ஹேர் கட்,

ஹேர் ஸ்பா, ஹேர் கலரிங் உள்ளிட்ட மேலும் பல அழகு கலை சம்பந்தமாக விரிவாகவும் நேர்த்தியுடனும் சிறந்த வல்லுநர்கள் மூலம் கற்றுதரப்பட இருக்கின்றது 30 நாட்கள் நடைபெறும் பயிற்சி காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை. நடைபெறும் பயிற்சிமுடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும். இப்பயிற்சியில்சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட எழுத படிக்கதெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.மேலும் வறுமை கோட்டு எண் அல்லது அல்லது AAY - குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை உள்ள கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள,

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, நூறு நாள் வேலை அட்டை வங்கி கணக்கு புத்தகம் , பான் கார்டு ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து மே-4-ஆம் தேதி நடக்கவிருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்ற பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், முதல் தளம் சுப்ரமணியம் காம்ப்ளக்ஸ், எளம்பலூர் சாலை பெரம்பலூர் – 621212 என்றமுகவரியிலோ அல்லது 04328-277896, என்றஎண்ணிலோ, அல்லது 919488840328 செல் எண் மூலமாக தொடர்பு கொள்ளலாம். பயிற்சி மைய அலுவலர் ஆனந்தி வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story