நலவாரிய பதிவுகளை இலவசமாக செய்து தரக்கோரிக்கை
நலவாரியத்தில் பதிவுகளை இலவசமாக செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் ஏஐடியுசி மாவட்டப் பொதுக் குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில், நல வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆவணங்களையும் வாரியம் பொறுப்பேற்று இலவசமாக இணையவழிப் பதிவுகளைச் செய்து தர வேண்டும். நூறு நாள் வேலையை 200 நாள்களாக அறிவித்து நடைமுறைப்படுத்தவும், தின ஊதியத்தை ரூ.600 ஆக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் வெ. சேவையா தலைமை வகித்தார். மாவட்டப் பொதுச் செயலர் ஆர். தில்லைவனம், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி. சந்திரகுமார், மாவட்டப் பொருளாளர் தி. கோவிந்தராஜன், செயலர் துரை. மதிவாணன், நுகர்பொருள் வாணிபக் கழக சுமை சங்க மாநிலத் தலைவர் அ.சாமிக்கண்ணு, பட்டு கைத்தறி சம்மேளன தலைவர் கோ.மணிமூர்த்தி, மீனவர்சங்க மாவட்டச் செயலர் நா. காளிதாஸ், தெரு வியாபார சங்க மாவட்டச் செயலர் ஆர்.பி. முத்துக்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story