மானாமதுரை அரசு ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம்

மானாமதுரை அரசு ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம்

அரசு தொழிற்பயிற்சி நிலையம்

மானாமதுரை அரசு ஐடிஐயில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

மானாமதுரை அரசு ஐ.டி.ஐ.,யில் மோட்டார் மெக்கானிக், சர்வேயர், எலக்ட்ரீசியன், ரெப்ரிஜிரேட்டர்,ஏசி மெக்கானிக் போன்ற தொழிற் பிரிவு 2 ஆண்டு படிப்புகளுக்கு கல்வித்தகுதி 10வது தேர்ச்சி. இவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித் தொகையாக ரூ.750, விலையில்லா சீருடைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள்,

வரைபட உபகரணங்கள் மற்றும் பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் 6 முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்த மாணவியர்களுக்கு மட்டும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.1000 வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் துவங்கியது. புதிதாக சேர விரும்பும் மாணவர்கள் www.skilltraning.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும், நேரடி சேர்க்கையும் நடைபெறுகிறது முதல்வர் சேகர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 98655 54672, 63813 66 970 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, 2 புகைப்படம், 2 நபர்களின் அலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்

Tags

Next Story