மஞ்சப்பை' விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!
கலெக்டர் பிருந்தாதேவி தகவல்
மஞ்சப்பை' விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிருந்தாதேவி தகவல்
மஞ்சப்பை, பாக்குமட்டை, காகிதங்களால் ஆன பைகள், உறைகள் ஆகியவை சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள். இந்த பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவித்து பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாததாக மாற்றும் சிறந்த பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களை தேர்வு செய்து ‘மஞ்சப்பை' விருது வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி மாநில அளவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை சிறப்பாக செயல்படுத்தி, பிளாஸ்டிக் இல்லாத வளாகத்தை உருவாக்கும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்கள் தேர்வு செய்யப்படும். இதற்கு முதல் பரிசு ரூ.10 லட்சம், 2-ம் பரிசு ரூ.5 லட்சம், 3-ம் பரிசு ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த விருதிற்கான விண்ணப்ப படிவங்களை https://salem.nic.in/notice/manjappai-awards என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் ஆவணங்களில் தனிநபர், துறை தலைவர் கையொப்பமிட வேண்டும். விண்ணப்பத்தின் 2 பிரதிகள் மெய்யனூரில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
Next Story