சொத்துவரி, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புக்கு விண்ணக்கலாம்

சொத்துவரி, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புக்கு விண்ணக்கலாம்

பைல் படம்

திருப்பூரில் சொத்துவரி,குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புக்கு விண்ணப்பித்துஒப்புகைசீட்டு பெறலாம் என மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்ஜிகிரியப்பனவர் அறிவித்துள்ளார்.

திருப்பூரில் சொத்து வரி ,குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புக்கு விண்ணப்பித்து ஒப்புகை சீட்டு பெறலாம் மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு! திருப்பூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு விரைவான சேவைகள் சென்றடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சொத்து வரி விதித்தல், குடிநீர் இணைப்பு, பாதாளசாக்கடை இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் மக்களுக்கு விரைவில் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சொத்து அறிவிப்பு, குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை பொதுமக்கள் தேவையான ஆவணங்களை இணைத்து 15 வேலம்பாளையம் நஞ்சப்பா நகர், நல்லூர், முருகம்பாளையத்தில் உள்ள 4 மண்டல அலுவலகங்களில் அளித்து அதற்குரிய ஒப்புகை சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நடைமுறையை தவிர்த்து தொடர்பு இல்லாத மற்ற நபர்களிடம் பொதுமக்கள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டாம். விண்ணப்பங்கள் அளிப்பது தொடர்பான கூடுதல் தகவலுக்கு மாநகராட்சியின் கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணான 155 304 அல்லது 04212321 500 என்ற எண்ணங்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story