விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலமாக பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்தவர்கள் விமான நிலையத்தில் பணிபுரிய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தாட்கோ மூலமாக பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்தவர்கள் விமான நிலையத்தில் பணிபுரிய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தாட்கோ மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்கள் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம் .

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை படிப்பு சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அடிப்படை படிப்பு சுற்றுலா துறையின் அடிப்படை படிப்புகள் மற்றும் விமான பயண முன்பதிவு போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 18 முதல் 23 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு ஆறு மாதமும் விடுதியில் தங்கி படிக்க வசதியும் பயிற்சிக்கான செலவீன தொகையான ரூ.95,000-த்தை தாட்கோவால் மேற்கொள்ளப்படும். இப்பயிற்சியினை வெற்றிதரமாக முடிக்கும் பட்சத்தில் IATA International Air Transport Association-Canda மூலம் அங்கீரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தனியார் விமான நிறுவனங்களிலும் (Indigo, Airliness, Spice Jet, Go First, Air India) சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலா துறையிலும் வேலை வாய்ப்பு பெறலாம். ஆரம்ப கால மாதாந்திர ஊதியமாக ரூ.20,000/- முதல் ரூ.22,000/- வரை பெறுவதற்கு வழி வகை செய்யப்படும். பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ரூ.50,000 முதல் ரூ.70,000- ஊதிய உயர்வு பெறலாம்.

இத்திட்டத்தில் பதிவு செய்வதற்குwww.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். எனவே உரிய பயனாளிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story