நிலஅளவைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் தகவல்

நிலஅளவைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் -  ஆட்சியர் தகவல்

ஆட்சியர் லட்சுமிபதி 

தூத்துக்குடி மாவட்டத்தில் நில அளவை செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நில அளவை செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen என்ற வசதியை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை தமிழக முதல்-அமைச்சர் சமீபத்தில் தொடங்கி வைத்தார். இந்த புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய 'எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தும்' நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது செல்போன் வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட ‘அறிக்கை/ வரைபடம்' ஆகியவற்றை மனுதாரா் https://eservices.tn.gov.in/ என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும். தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags

Next Story