அழகப்பா பல்கலைக்கழக சின்டிகேட் உறுப்பினர்கள் நியமனம்

அழகப்பா பல்கலைக்கழக சின்டிகேட் உறுப்பினர்கள் நியமனம்

அழகப்பா பல்கலைக்கழகம் 

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சின்டிகேட் உறுப்பினர்களாக 3 பேரை கவனர் ஆர்.என்.ரவி நியமித்துள்ளார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சின்டிகேட் உறுப்பினர்களின் கவர்னர் நாமினியாக ஏற்கனவே டாக்டர் சுவாமிநாதன், பேராசிரியர் குணா, டாக்டர் ராஜா ஆகியோர் 3 ஆண்டுகள் பணியாற்றினர். இவர்களது பணிகாலம் முடிவடைந்ததை முன்னிட்டு புதிய சின்டிகேட் உறுப்பினர்கள் கவர்னர் நாமினியாக அழகப்பா பல்கலைக்கழக மூத்த பேராசிரியர், உயிரி தகவலியல் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் ஜெ.ஜெயகாந்தன், சென்னை ஐஐடி கணிததுறை பேராசிரியர் சஞ்சய்ராஜூ, விஎஸ்எஸ் எடிடா, சென்னை டவர் டெஸ்டிங் மற்றும் ஆராய்ச்சிமைய முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர் ஜி.எஸ்.பழனி ஆகியோரை சின்டிகேட் உறுப்பினர் கவர்னர் நாமினியாக நியமித்து கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

புதிதாக சின்டிகேட் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள 3 பேரும் 3ஆண்டுகளுக்கு பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story