மாநகர திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் நியமனம்

ரூபஸ் அமிர்தராஜ்
தூத்துக்குடி மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளராக ரூபஸ் அமிர்தராஜ், மாநகர தலைவராக நாகராஜன், துணைத் தலைவராக ஜேசுராஜாதயான், துணை அமைப்பாளர்களாக ரூபராஜா, அந்தோணி செல்வதிலக், செல்வலட்சுமி, அஜித், மணிகண்டன், பாலசுப்பிரமணியன், ஆகியோரை நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் நியமணம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ரூபஸ் கூறுகையில் "வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பாிந்துரையின்படி மேற்கண்ட எங்களை வழக்கறிஞர் அணி பொறுப்பிற்கு பணியமர்த்தியுள்ளனர். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கணிமொழி எம்.பியின் வெற்றிக்கும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கொடுக்கப்படும் பணிகளையும் முழுமையாக செய்து கட்சியை வளர்ப்பதற்கும் கடமை உணர்வோடு மாநகர வழக்கறிஞர் அணி பணியாற்றும் இந்த பொறுப்பை எங்களுக்கு வழங்குவதற்கு துணையாக இருந்து அமைச்சர் கீதாஜீவனுக்கு என்றும் நன்றி கடன் பட்டவர்களாக இருப்போம் என்று தெரிவித்தார்.
