கதிரியக்கத் துறையில் டார்க் ரூம் உதவியாளர்கள் நியமனம் :

கதிரியக்கத் துறையில் டார்க் ரூம் உதவியாளர்கள் நியமனம் :
X

கதிரியக்கத் துறை

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்  கதிரியக்கத் துறைக்கு டார்க் ரூம் உதவியாளர்கள் நியமனம் தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கதிரியக்கத் துறைக்கு டார்க் ரூம் உதவியாளர்கள் நியமனம் தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எம்பவர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோயாளர் நலச் சங்க ஆளுமைக்குழு உறுப்பினர் ஆ. சங்கர் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு: தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கதிரியக்கத் துறையின் செயல்பாடுகள் குறித்து நாளிதழ்களில் இன்று செய்தி வெளிவந்துள்ளது.

இது பற்றி அறிந்தவுடன் நான் இன்று காலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வரை நேரில் சென்று சந்தித்து இது குறித்து விசாரித்தேன். அதனடிப்படையில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நோயாளர் நலச் சங்க ஆளுமைக்குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் கீழ்க்கண்ட விவரங்களை தங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன். மருத்துவமனையின் நிர்வாகத்திற்கும், கதிரியக்கத் துறைக்கும் இடையே மிகுந்த விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஊடகங்களில் இது குறித்த செய்திகள் வெளிவருகின்றது.

இதன் காரணமாக பொது மக்களும், நோயாளிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆகவே கதிரியக்கத் துறை சம்மந்தமாக ஒரு உண்மை அறியும் குழுவை தாங்கள் நியமிக்க வேண்டும் என வேண்டுகிறோம். . கதிரியக்கத் துறையின் வெளி நோயாளிகள் பிரிவிற்கு தேவைப்படும் செவிலியர்களை உடனடியாக பணியமர்த்த ஆணையிட வேண்டுகிறோம். மருத்துவத் துறை கடிதபடி கதிரியக்கத் துறைக்கு 5 டார்க் ரூம் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த 5 நபர்களும் கதிரியக்கத் துறையில் பணியில் அமர்த்தப்படவில்லை. மாறாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வேறு துறைகளில் பணி செய்ய மருத்துவமனையின் நிர்வாகம் உத்திரவிட்டதால் வேறு துறைகளில் பணி செய்வதாக தெரிய வருகிறது.

ஆகவே இந்த துறைக்கென படித்து தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த 5 நபர்களை உடனடியாக கதிரியக்கத் துறையிலேயே பணி செய்ய ஆணையிடுமாறு வேண்டுகிறோம். மேலும் நோயாளர் நலச் சங்க ஆளுமைக்குழு கூட்டத்தை குறித்த கால அவகாசத்திற்குள் மருத்துவமனை வளாகத்திலேயே நடத்த ஆவன செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம் இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story