திமுக., மாணவரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமனம்

நாமக்கல்லில் திமுக., மாணவரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமனம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது … மாண்புமிகு கழகத்தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாணவர் அணி செயலாளர் எழிலரசன் அறிவிப்பின்படி நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் அளவில் மாணவரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் ஒன்றிய, நகர,பேரூர் அமைப்பிற்கு ஒரு அமைப்பாளர் மற்றும் ஐந்து துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் துணை அமைப்பாளர்களில் ஒருவர் ஆதி திராவிடர் அல்லது பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவராகவும், பெண் துணை அமைப்பாளர் ஒருவரும் நியமிக்கப்படுவார்கள்.
ஒரு துணை அமைப்பாளர் தற்போது கல்லூரியில் பயிலக்கூடிய மாணவராக இருக்க வேண்டும். இந்த பொறுப்புகளில் உள்ள தற்போதைய நிர்வாகிகள் மீண்டும் பொறுப்புகளுக்கு வர விரும்பினால் அவர்களும் விண்ணப்பிக்க வேண்டும். 30 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பொறுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். நியமிக்கப்பட உள்ள நிர்வாகிகள் அனைவரும் கல்லூரி டிப்ளமோ படிப்பை முடித்தவராகவோ அல்லது தற்போது கல்லூரியில் படிக்கக்கூடியவராகவோ இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக நிரப்பி பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படம் ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் திமுக உறுப்பினர் அட்டை வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை கல்வி சான்றிதழின் நகல் இணைக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட திமுக அலுவலகம் ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள் அல்லது மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர் இடம் கொடுக்க வேண்டும். வரும் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.
தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நேர்காணலுக்கான இடம் மறறும் தேதி பின்னர் அறிவிக்கபடும். இவ்வாறு மாவட்ட கழகச் செயலாளர் மதுரா செந்தில் அவர்கள் தெரிவித்துள்ளார்
