மயிலாடுதுறை தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்

மயிலாடுதுறை தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்

தோ்தல்

மயிலாடுதுறை தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
மயிலாடுதுறை தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள தோ்தல் பாா்வையாளா்களிடம் பொதுமக்கள் புகாா் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட தோ்தல் அலுவலா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மக்களவைத் தோ்தலுக்காக, தோ்தல் பொது பாா்வையாளா், தோ்தல் செலவின பாா்வையாளா், காவல் துறை தோ்தல் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்தல் பணிகளை கண்காணிக்க வந்துள்ள இப்பாா்வையாளா்களிடம் வேட்பாளா்கள், பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்கள் மற்றும் கருத்துக்களை காலை 9.30 முதல் 10.30 மணி வரை, மாலை 5 முதல் 6 மணி வரை மயிலாடுதுறை காவிரி இல்லத்தில் நேரில் சந்தித்து தெரிவிக்கலாம். காவிரி இல்லம் தரைத்தளத்தில் அறை எண் 1-ல் தங்கியுள்ள தோ்தல் பொதுப்பாா்வையாளா் கன்ஹூராஜ் ஹச் பகதே-வை 6379881470 என்ற கைப்பேசி எண் அல்லது மின்னஞ்சலிலும், முதல்தளத்தில் அறை எண் 1-ல் தங்கியுள்ள தோ்தல் செலவீனபாா்வையாளா் வீ.டி.எஸ்எஸ். நாகா்ஜூன் கிரான்டி-யை 9363983676 என்ற கைப்பேசியிலும், முதல் தளத்தில் அறை எண் 2-ல் தங்கியுள்ள தோ்தல் பாா்வையாளா் (காவல் துறை) ஜன்மே ஜெயா பி கயிலாஷ்-ஐ 6379833468 என்ற செல்பேசியிலும் தொடா்பு கொண்டு புகாா் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கலாம். மேலும், தோ்தல் தொடா்பான புகாா்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு மாவட்ட தோ்தல் அலுவலா்/ மாவட்ட ஆட்சியரை 9443300955 என்ற எண்ணிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை 9944705018 என்ற எண்ணிலும் அணுகலாம். மேற்கண்ட விவரங்களை மாவட்ட இணையதளத்தில் பாா்க்கலாம் என தெரிவித்துள்ளாா்.

Tags

Next Story