அஞ்சல் வாக்கு பதிவு செய்ய நடமாடும் வாக்குப்பதிவு குழுக்கள் நியமனம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
சிவகங்கை பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குரிமை பெற்று வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வர இயலாத 85 வயதைக் கடந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி நபர்கள் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க படிவம் 12D-யில் விருப்பமனு அளித்துள்ளனர்.
அதன்படி, திருமயம் சட்டமன்றத் தொகுதியில் 85 வயதைக் கடந்த 255 நபர்களுக்கும், 183 மாற்றுத்திறனாளி நபர்களுக்கும் 6 நடமாடும் வாக்குப்பதிவு குழுக்களும், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் 85 வயதைக் கடந்த 181 நபர்களுக்கும், 59 மாற்றுத்திறனாளி நபர்களுக்கும் 5 நடமாடும் வாக்குப்பதிவு குழுக்களும், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 85 வயதைக் கடந்த 375 நபர்களுக்கும், 187 மாற்றுத்திறனாளி நபர்களுக்கும் 8 நடமாடும் வாக்குப்பதிவு குழுக்களும், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 85 வயதைக் கடந்த 366 நபர்களுக்கும், 224 மாற்றுத்திறனாளி நபர்களுக்கும் 8 நடமாடும் வாக்குப்பதிவு குழுக்களும், சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் 85 வயதைக் கடந்த 320 நபர்களுக்கும், 243 மாற்றுத்திறனாளி நபர்களுக்கும் 6 நடமாடும் வாக்குப்பதிவு குழுக்களும், மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் 85 வயதைக் கடந்த 312 நபர்களுக்கும், 85 வயதைக் கடந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு இருப்பிட முகவரிக்கு சென்று அஞ்சல் வாக்கு பதிவு செய்ய 40 நடமாடும் வாக்குப் பதிவு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்குப்பதிவானது 06.04.2024 முதல் 08.04.2024 வரை நடைபெறவும், வாக்குப்பதிவு நிகழ்வினை முழுமையாக வீடியோ பதிவு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாக்குப்பதிவினை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கண்காணிக்க விரும்பினால், தேர்தல் நடத்தும் அலுவலருக்கு முன்னரே தகவல் தெரிவித்து வேட்பாளர்/ தேர்தல் முகவர் கையொப்பமிட்டு படிவம் 10-இன் படி முகவர் நியமனம் செய்து வாக்குப்பதிவிற்கு இடையூறின்றி கண்காணிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்