தமிழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களாக மூன்று பேர் நியமனம் 

தமிழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களாக மூன்று பேர் நியமனம் 
தமிழ் பல்கலைக்கழகம்
தமிழ் பல்கலைக்கழகத்தில் பேரவை உறுப்பினர்கள் மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகத்திற்கு பேரவை உறுப்பினர்களாக மூன்று பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் சி.தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்ப் பல்கலைக்கழக இணைவேந்தராகிய தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சரால், சென்னை சாலிகிராமம் வி.எம். முத்துராமலிங்க ஆண்டவர், கோவை பாரதியார் பல்கலைக்கழக மொழியியல் துறை இணைப்பேராசிரியர் எஸ்.சுந்தரபாலு, மதுரை காமராஜர் பல்கலைக்கழக மொழியியல் துறை உதவி பேராசிரியர் ஆர்.குமாரசாமி ஆகியோர், தமிழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களாக பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் 3 ஆண்டு காலத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story