மனித உரிமைகள்,சமூக நீதி அமைப்பின் துணை தலைவர் நியமனம்

மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி அமைப்பின் மாவட்டத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இரத்தின சபாபதிக்கு லயன்ஸ் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் மெய்கண்டார் கோயில் வளாகத்தில் தலைவர் லயன் மேழிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மனித உரிமைகள் & சமூக நீதி அமைப்பின் கடலூர் மாவட்டத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பெண்ணாடம் லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர் இரத்தின சபாபதிக்கு சாசனத் தலைவர் மு ஞானப்பிரகாசம், லயன்ஸ் உறுப்பினர்கள் அனைவரின் சார்பிலும் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story