ஞானமணி கல்வி நிறுவனங்களில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

ஞானமணி கல்வி நிறுவனங்களில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

ஞானமணி கல்வி நிறுவனம் 

ஞானமணி கல்வி நிறுவனங்களில் பணி நியமன ஆணை வழங்கும் விழா மற்றும்+2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி கருத்தரங்கு

ஞானமணி கல்வி நிறுவனங்களில் பணி நியமன ஆணை வழங்கும் விழா மற்றும் +2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி கருத்தரங்கு நடைபெற உள்ளது. விழாவில் ஞானமணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் ப.மாலாலீனா அவர்கள் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைக்க உள்ளார். ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் முனைவர் தி.கே.கண்ணன் அவர்கள் வரவேற்புரை ஆற்ற உள்ளார். ஞானமணி கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் தி.அரங்கண்ணல் அவர்கள் தலைமையுரை ஆற்ற உள்ளார்.

ஞானமணி கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் செல்வி.மதுவந்தினி அரங்கண்ணல், முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் பி.பிரேம்குமார், கல்வி இயக்குநர் முனைவர் பி.சஞ்செய் காந்தி, டீன்- இரசாயன அறிவியல் முனைவர் வி.பாஸ்கரன், ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் எஸ்.செல்வராஜன் மற்றும் இன்னோவேசன் மற்றும் இங்குபேசன் ஆலோசகர் முனைவர் ஆர்.விஜயரங்கன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியின் துணை முதல்வர் சந்திரமோகன்; அவர்கள் சிறப்பு விருந்தினர் சி.கோபிநாத், விஜய் டிவி, முதன்மை செயல் அதிகாரி, டால்க்சாப் அகடமி, சென்னை அவர்களை அறிமுகப்படுத்த உள்ளார்.

சிறப்பு விருந்தினர் சி.கோபிநாத், விஜய் டிவி, முதன்மை செயல் அதிகாரி, டால்க்சாப் அகடமி, சென்னை அவர்கள் விழாவில் கலந்து கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.

ஞானமணி கல்லூரியில் 54-க்கும் மேற்பட்ட நிறுவனமான காக்னிசன்ட், டிசிஎஸ், ஹெக்ஷாவேர், அஸ்பெயர் சிஸ்டம்ஸ், ஓ.எப்.எஸ், முருகப்பா, ஜிலோஜி சிஸ்டம்ஸ், புல் கிரியேடிவ், மோபியஸ், பூர்ணம் இன்போ விசன், அபீபா, மில்கால், அப்பாசாமி அசோசியேட், வெர்னாலிஸ், ஜேரோ, சதர்லேண்டு மற்றும் பல நிறுவனங்கள் ஞானமணி கல்லூரிக்கு வந்து தேர்வுகள் நடத்தியதன் மூலம் 584 மாணவர்களுக்கு 984 பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது.

விழா முடிவில் ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியின் வேலைவாய்பு அதிகாரி முனைவர். ஆர்.பிரபு அவர்கள் நன்றியுரை வழங்க உள்ளார்.

Tags

Next Story