உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
பாப்பாரப்பட்டியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா உண்டு உறைவிட பள்ளி மாணவ மாணவிகளை எம்எல்ஏ பாராட்டினார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பாரப்பட்டியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில், நல்லம்பள்ளியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சீட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் 12ஆம் வகுப்பில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற உண்டு உறைவிடப் பள்ளி மாணவிகளுக்கு உயர்கல்வி பயில வழிகாட்டுதல் மற்றும் பாராட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் பங்கேற்று தொண்டு நிறுவனத்தையும், மாணவிகளையும் பாராட்டினார். மேலும் மாணவ மாணவிகளை மென்மேலும் கல்வி பயின்று வாழ்க்கையில் வெற்றி பெற ஊக்கமளித்தார் இந்த நிகழ்ச்சியில் சீட்ஸ் தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் உண்டு உறைவிட பள்ளி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story